இன்னும் அப்படியே தான் இருக்கின்றேன்..பெரும்பாலும் செய்யும் சின்ன சின்ன தவறுகளை மறைக்கிறேன், தவறை நியாயப்படுத்த மேலும் வாதிடுகிறேன், மேலும் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள எப்பொழுதும்போல் மனம் மறுக்கிறது. அன்று எதிர்ப்பாரமால் என்னுடுய மேலாளார் காலையில் வந்தவுடனே என்னை அழைத்து ஏதோ கேட்க..நானும் எப்பொழுதும்போல் எதோ ஒரு காரணம் சொல்ல, வழக்கம்போல் ஆரம்பித்தது 'பஜனை'..வருடத்தின் முதல் நாள் அலுவலகத்தில் இனிதே தொடங்கியது. இப்ப தான் 2000 வருடம் ஆரம்பித்த மாதிரி இருக்கு அதுக்குள்ள பத்து வருஷம் ஆகிடுச்சு ..ஆனா பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த அதே மனநிலை..வயசாகுது, பொறுப்பு வரனும் இன்னும் இதேப்போல் நிறைய வருஷங்கள் இருந்தாலும்..ம்ம்ஹும்..வாய்பே இல்லை அப்படியே தான் போகப்போகிறது இந்த வருடமும்.. பார்ப்போம்..!!
...................................................................................................................................
...................................................................................................................................
Zee Tamilலில் தமிழர் பார்வையில் இரண்டு வாரமாக 'ராஜீவ் கொலை வழக்கு' என்ற புத்தகத்தின் ஆசிரியர் முன்னாள் சிபிஐ அதிகாரி திரு.ரஹோத்தமன் அவர்களின் பேட்டி ஒளிப்பரப்பானது. அவரோடைய பேட்டி சுவாரசியம் என்றாலும் ஒரு முன்னாள் பிரதமரின் படுகொலை விஷயத்தில் நம் நாட்டின் உளவு அமைப்பு வேண்டுமென்றே மிகப்பெரிய கோட்டை விட்டு இருக்கிறதோ என்கின்ற ரீதியில் இருந்தன.அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளை நேர்மையாக இயங்கவிடவில்லை என்றும்,வேண்டுமென்றே அன்று பல சாட்சிகள் மறைக்கபட்டதாகவும், பலப்பேரை தப்பிக்க விட்டதாகவும் சொன்னார்.ஆனால் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார் என்றே சொல்லவேண்டும். அவர் சொன்ன இன்னொரு விஷயம்.."ஆஷியாவின் மிகப்பெரிய நாடு என்று சொல்லிகொள்கின்றோம்..ஆனால் உளவுத்துறையால் கூட நேர்மையாக முழுவீச்சில் இயங்க முடியவில்லை அதுவும் இறந்தது முன்னாள் பிரதமர்..இன்றளவும் பூசி மொழுகும் வேலையே தான் செய்துக்கொண்டு இருக்கிறது உளவுத்துறை"..என்று முடித்தார்.
..............................................................................................................................................................................................
..............................................................................................................................................................................................
அரைக்குறையாக வெந்த அரிசியை சாப்பிடவது உடம்புக்கு ஒரு விதத்தில் நல்லது தானாம்..அது ஒரு வகையான ருசியை தரும் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து அரிசியை முழுசாக வேக வைத்து சாப்பிடுபவர்கள் இதைப்போல் ஒரு முறை சாப்பிட்டு பார்க்கலாம். கம்போடியா நாட்டில் கூட இதேப்போல் உணவுப்பழக்க வழக்கம் நடைமுறையில் இருப்பதாக தெரிந்துக்கொண்டேன்( போன வாரம் அரைகுறையாக வெந்த சாதத்தை வேற வழியே இல்லாமல் வேண்டா வெறுப்பாக சாப்பிட்டப்பின் நெட்டில் தேடி கண்டுப்பிடித்து படித்தது).
...........................................................................................................................................................................................
...........................................................................................................................................................................................
பெரும்பாலனவர்கள் ஏற்கனவே 2009ல் வெளிவந்த படங்களை பற்றி எழுதி விட்டதால்..ச்சும்மா ஒரு கணக்கு எடுத்தேன் யார் யாருக்கு எந்த படம் பிடித்தது என்று போன வருடம் வெளிவந்த படங்களில் பதில்கள் இதோ :
கிஷோர் : ஈரம்
கலையரசன் : வெண்ணிலா கபடிக்குழு
சென்ஷி & நான் ஆதவன் : பசங்க
கார்த்திகேயன் (அறிவுத்தேடலும்) : பேராண்மை.
எனக்கும் இந்த படங்கள் எல்லாம் பிடித்து இருந்தது..அதுவும் 'பசங்க' தான் மிகவும் பிடித்து இருந்தது. ஏன்டா இது ஒரு கணக்குனு எடுத்துக்கிட்டு உக்கார்ந்து இருந்தியே வேற வேலைவெட்டி இல்லையா என்று கேட்க நினைப்பவர்களுக்கு "சாரி..ராங் நம்பர்"..:)
...............................................................................................................................................................................
...............................................................................................................................................................................
போன வாரம் எதோச்சையாக பேப்பரில் எதோ தமிழில் எழுதி பார்த்தேன்..எதோ வித்தியாசமாக படவே மறுப்படியும் எழுதினேன் அதே வார்த்தைகளை அப்பொழுது தான் கவனித்தேன் எப்படி எழுதி இருக்கிறேன் என்று..veetil anaivarum nalamaa என்பதை ஆங்கிலத்திலேயே எழுதி உள்ளேன் எல்லாம் 'கூகிள் இன்டிக்'னால் ஏற்ப்பட்ட பாதிப்பு.
...................................................................................................................................................................................
டிஸ்கி: திங்கள் இனிதே சீசன்-2 என்று தான் பெயர் வைக்கலாம் என்று பார்த்தேன்..ஆமாம் முன்னாடி சீசன்ல அப்படியே எழுதி கிழிச்சிட்ட பாரு என்று சொல்லுவிர்கள் என்று தெரியும்..அதனால் அப்படியே கன்டினியு பண்ணுறேன்..